‘எங்கள் தங்கம்’ காட்சியில் கையில் துப்பாக்கியுடன் சமந்தா அதிரடி வேட்டை

‘எங்கள் தங்கம்’ காட்சியில் கையில் துப்பாக்கியுடன் சமந்தா அதிரடி வேட்டை

படம்: தினமணி

13 Jun 2026 - 4:15 pm

1 mins read

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிரட்டலான அதிரடி அவதாரத்தில் நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (டிரைலர்) வெளியாகியுள்ளது.

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், தெலுங்கில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரிலும் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற தலைப்பிலும் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கௌதமி, ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஜூன் 19ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது.

ஏறத்தாழ 3 நிமிட முன்னோட்டக் காட்சியின் தொடக்கத்தில், காதலன் வீட்டுப் பெரியவர்கள் சமந்தாவிடம் சமையல், கோலம், பாட்டு என ஒரு மருமகளுக்கான தகுதிகள் குறித்துக் கேட்கின்றனர்.

தனக்கு அவை எதுவுமே தெரியாது என்பதைச் சொல்லாமல் சொல்லும் சமந்தா, அடுத்தடுத்த காட்சிகளில் கையில் துப்பாக்கியை ஏந்தி எதிரிகளைப் பந்தாடுகிறார்.

“சிறந்த மருமகளாக இருக்க அழகு, அடக்கம் என்ற தகுதிகள் எதுவும் எனக்கில்லை; ஆனால், என் குடும்பத்துக்கு ஒன்று என்றால் என் உயிரைக் கொடுத்தும் காப்பாத்துவேன்,” என அவர் பேசும் வசனம் அனல் பறக்கிறது.

‘யசோதா’ படத்திற்குப் பிறகு சமந்தா மீண்டும் இதில் அதிரடி சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த முன்னோட்டக் காட்சி லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
சமந்தாதுப்பாக்கிஇயக்குநர்திரைப்படம்