உடற்பயிற்சிதான் தம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது என்கிறார் இளம் நாயகி கயாது லோஹர்.
‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், இணையத் தளத்தில் அதிகம் தேடப்படும் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில், ‘படப்பிடிப்பில் இடைவிடாமல் பங்கேற்பதும் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் எப்படி சாத்தியமாகிறது’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
“அனைத்துக்கும் காரணம் உடற்பயிற்சிதான். தினமும் அதிகாலையில் எழுந்து விடுவேன். குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் யோகாசனம் செய்த பிறகு, அனைத்து உடல் பாகங்களையும் உள்ளடக்கிய உடற்பயிற்சியிலும் ஈடுபடுகிறேன். நேரம் இருப்பின், நடைப்பயிற்சியையும் விடுவதில்லை.
“இவ்வாறு நான் செலவிடும் இரண்டு மணி நேரம்தான், நாள் முழுவதும் என்னை உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட வைக்கிறது,” என்று கூறியுள்ளார் கயாது.