சுழல் இணையத்தொடரில் ‘முத்து’ என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கௌரி கிஷன் நடிப்புக்கு பரவலாகப் பாராட்டு கிடைத்தது.
குறிப்பாக, சண்டைக்காட்சியில் அவர் மிக இயல்பாக நடித்திருப்பதாகப் பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அந்த சண்டைக் காட்சிகளுக்கு கௌரி எவ்வாறு பயிற்சி மேற்கொண்டார் என்பதை விவரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் பரவலாகப் பகிரப்படும் அந்தக் காணொளியைப் பதிவிட்டதும் கௌரி கிஷன்தானாம்.
அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், இக்காணொளி பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என கௌரி கிஷனைப் பாராட்டி உள்ளனர்.
விஜய் சேதுபதியின் ‘96’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கௌரி கிஷன், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

