‘அமரன்’ படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு ரசித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
படம் பார்த்த முதல்வர் படக்குழுவினரைப் பாராட்டியதுடன், தயாரிப்பாளர் கமல்ஹாசனிடமும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
“நண்பர் கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று ‘அமரன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். புத்தகங்களைப்போல் திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளையர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“ராணுவ வீரர்களுக்கும் நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் பெரிய ‘சல்யூட்’,” என்று முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.