‘லப்பர் பந்து’ படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார் சுவாசிகா.
விருது விழாவில் பேசிய அவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் தமிழரசு பச்சமுத்து தனக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் படத்துக்குப் பிறகுதான் தமக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் வெளிப்படையாகக் கூறினார்.
“விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ‘லப்பர் பந்து’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கும் வகையில் இருந்தன.
“என்னுடைய திரைப் பயணத்தில், வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்களில் துணையாக இருந்த என் அம்மாவுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்,” என்றார் சுவாசிகா.