நடிகர் சங்கக் கட்டட கட்டுமானப் பணிக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்துள்ள பிரபலங்கள்

1 mins read
1e05c820-ea78-40bd-a7b5-e9e6dde44388
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், தனுஷ். - படம்: .ஊடகம்

2017ஆம் ஆண்டு நடிகர் சங்க கட்டடக் கட்டுமானப் பணி தொடங்கியது. இதற்கென உச்ச நட்சத்திரங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அண்மையில் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நடிகர் கார்த்தி, “கடந்த மூன்று மாதங்களாக நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

“இப்பணிக்காக நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், தனுஷ், கார்த்தி, சூர்யா, நெப்போலியன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர். இதையும் தாண்டி உதயநிதி ஸ்டாலினிடமிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.

“நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இவர்களைத் தாண்டி மேலும் சில நடிகர்கள் கடனாகவும் நிதி அளித்துள்ளனர்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்