‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ படப்பிடிப்பு நிறைவு

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ படப்பிடிப்பு நிறைவு

படம்: தினமலர்

18 Sep 2026 - 3:53 pm

1 mins read

ஆன்ஷ்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏகாம்பரம் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர், எலிசபெத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “90களைச் சேர்ந்த இளையர்கள் தங்களுக்குப் பெண் கிடைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாகச் சொல்லும்.

“அத்துடன், நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைத் திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பிந்தைய தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பல்வேறு சுவாரசியமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப மாற்றமும் இணையத்தின் வளர்ச்சியும் அதிவேகமாக உருவெடுத்த காலகட்டத்தில் ‘90ஸ் கிட்ஸ்’ வளர்ந்ததால், இவர்கள் ஒரு தனித்துவமான தலைமுறையினராகக் கருதப்படுகிறார்கள்.

குறிப்பாக, தற்காலப் பொருளியல் சூழலில் வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகள், திருமணக் கோரிக்கைகளில் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.

சமூக அமைப்பிலும் வேலைச் சூழலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அமைதியாகக் கடந்து செல்லும் பக்குவம் கொண்டவர்களாக இவர்கள் ஊடகங்களில் சித்திரிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்