சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் இருக்கவேண்டும்,” என்று தீபாவளியன்று வாழ்த்திய அவரிடம், விஜய்யின் தவெக முதல் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், விஜய்க்கு தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.