வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக்கம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக்கம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்: புதிய தலைமுறை

13 Nov 2026 - 7:01 pm

1 mins read

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான், அதையொட்டிய கடற்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் வரும் நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், நவம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறினால், ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ எனப் பெயரிடப்படும் என்றும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவாகும் மூன்றாவது புயலாக அது இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
வானிலைஆய்வுமழைஅந்தமான்