தீபாவளிக்கு நான்கு பிரம்மாண்டத் திரைப்படங்கள் போட்டி

தீபாவளிக்கு நான்கு பிரம்மாண்டத் திரைப்படங்கள் போட்டி

1 mins read
996d62e1-9b65-47f1-9da7-8cc4a9993985
‘சீன்’,  ‘மூக்குத்தி அம்மன் 2’,  ‘ராமாயணா’, ‘மூன் வாக்’ படங்களின் காட்சிகள். - படம்: சினிரிப்போர்ட்டர்ஸ்

இந்த ஆண்டு (2026) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நாயகனாக நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். நஸ்ரியா நாயகியாக நடிக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதில் வில்லி கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார்.

அதேபோல், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

மேலும், மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கும் ‘மூன் வாக்’ திரைப்படமும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விருந்தினர் தோற்றத்தில் நடித்துள்ளார்.

திரை ரசிகர்களுக்கு இந்தத் தீபாவளி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்