இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன், 80 வயதிலும் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் எனப் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவரது வீட்டில் தங்க முலாம் பூசப்பட்டக் கழிவறை இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகரான விஜய் வர்மா 2016ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சில படங்களை தனது ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தில் அண்மையில் வெளியிட்டார்.
அதில், அமிதாப்பச்சன் வீட்டின் தங்க கழிவறை எனக் குறிப்பிட்டு ஒரு தம்படமும் இருந்தது.
அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.

