ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘சாவா’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அக்ஷய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி, சாயிபாய் தம்பதியரின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
மேலும், சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போரை விவரிப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.130 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், உலகம் முழுவதும், கடந்த 27 நாள்களில் மட்டும் இந்தப்படம் ரூ.727 கோடி வசூல் கண்டுள்ளது.
பிரதமர் மோடி பாராட்டியுள்ள இந்தப் படத்தில் இந்தி முன்னணி நடிகர் விக்கி கவுசல் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ஏறக்குறைய ரூ.550 கோடி வசூல் கண்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வரிவிலக்கு அளித்திருப்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இதனால் இந்தியில் தனக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தனது திறமையை வெளிப்படுத்த இயலும் என்றும் நம்புவதாகச் சொல்கிறார் ராஷ்மிகா.