சாய் பல்லவியைப் பார்த்து நடித்தேன்: மானசா

சாய் பல்லவியைப் பார்த்து நடித்தேன்: மானசா

1 mins read
9c94736c-2177-4954-b34b-d988191cbf14
மானசா வாரணாசி. - படம்: ஃபெமினா
Google News Preferred Icon

அண்மையில் தெலுங்கில் வெளியான ‘கப்புல் ஃபிரெண்ட்லி’ என்ற படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பும் வசூலில் சோடை போகவில்லை என்கிறார்கள்.

தயாரிப்பாளருக்கு லாபமோ இல்லையோ, இப்படத்தின் கதாநாயகியான மானசா வாரணாசி இளையர்களுக்குப் பிடித்தமான நாயகியாகிவிட்டார்.

இந்தப் படத்தில் சாய் பல்லவியைப்போல் நடித்திருப்பதால்தான் தமக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக தாம் நம்புவதாகச் சொல்கிறார் மானசா.

‘கப்புல் ஃபிரெண்ட்லி’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் சாய் பல்லவியின் தீவிர‌ ரசிகராம்.

தன் படத்தின் கதையை மானசாவிடம் விவரித்தபோது, சாய் பல்லவியின் படங்களைப் பார்த்து அவரைப் போல் நடிக்க முயற்சி செய்யுங்கள் எனத் தொடக்கத்திலேயே தெளிவாகக் கூறிவிட்டாராம்.

“பிறகென்ன, சாய் பல்லவி நடித்த படங்களை விடாமல் பார்த்தேன். அவரை முன்மாதிரியாகக் கொண்டு நடித்ததால்தான் ரசிகர்கள் என்னை வரவேற்றுள்ளதாக நம்புகிறேன்,” என்கிறார் மானசா.

குறிப்புச் சொற்கள்