தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நன்றிக்கடன் பட்டுள்ளேன்: ஜெனிலியா

1 mins read
8f6f1d13-7d43-4c89-b1b9-a8ee992ef7ce
ஜெனிலியா. - படம்: ஊடகம்

தற்போது ஆமீர்கானுடன் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெனிலியா.

தனக்கு நல்ல வாய்ப்புகளை அளித்த தென்னிந்திய திரையுலகுக்கு கடமைப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் நடிகை ஜெனிலியா.

தென்னிந்திய மொழிப் படங்களில் தமக்கு நல்ல வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என ஒரு தரப்பினர் கூறுவது சரியல்ல என்று அண்மைய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நிச்சயமாக அப்படிக் கிடையாது. தென்னிந்தியப் படங்களில் எனக்கு எப்போதும் வலுவான நல்ல கதாபாத்திரங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

“தமிழில் ஹாசினி என்றும் தெலுங்கில் ஹரினி என்றும் மலையாளத்தில் ஆயிஷா என்றும் என்னுடைய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் என்னை தென்னிந்திய மக்கள் அடையாளப்படுத்தி நினைவில் வைத்திருக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார் ஜெனிலியா.

தென்னிந்தியவில் இயக்குநர் ராஜமெளலி, சங்கர் உட்பட பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் ஜெனிலியா பணியாற்றி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்