என்னால் நம்ப முடியவில்லை: ராஷ்மிகா மந்தனா

1 mins read
c30e46f9-2481-43d6-a8a2-44cff8c3c9cc
‘கீத கோவிந்தம்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

தெலுங்கு முன்னணி நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் ‘கீத கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்தது குறித்து சமூக ஊடகத்தில் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது. படப்பிடிப்பின் போதுதான் இருவரும் காதல் வயப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாகக் கூறவில்லை என்றாலும், அது தொடர்பான செய்திகளை மறுக்கவும் இல்லை.

இந்நிலையில், ‘கீத கோவிந்தம்’ வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதையடுத்து, “இந்தப் படம் எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமான, சிறந்த படம்,” எனப் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

“ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் புகைப்படங்களை வைத்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. இப்படம் உருவாக காரணமாக இருந்த அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.

“படம் வெளியாகி இவ்வளவு நாள்கள் கடந்துவிட்டன என்பதையும் நம்ப முடியவில்லை. எனினும் என் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்கிறேன்,” என்று ராஷ்மிகா மந்தனா தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே ராஷ்மிகா குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “அவர் எனக்குக் கிடைத்த இன்னொரு ஆசிர்வாதம். என் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெண்,” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

குறிப்புச் சொற்கள்