வார்த்தையால் விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்தேன்: அமலா பால்

1 mins read
ce34bcde-9724-4f57-b13d-8ab873725f71
அமலா பால். - படம்: ஊடகம்

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.

அப்பட வெற்றிக்குப் பிறகு விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். தமிழைத் தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஏ. எல். விஜய்யைக் காதலித்து திருமணம் செய்த அவர், பின்னர் விவாகரத்து பெற்று ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இலை என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், 17 வயதில் தான் நடித்த படத்தால் பல இன்னல்களுக்கு ஆளானது குறித்து அமலா பால் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “ சிந்து சமவெளி படம் வெளிவந்த பின் பல துன்பங்களை நான் சந்தித்தேன். எனது குடும்பம் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

என்னை விட என் தந்தைதான் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனால் மைனா படத்தின் விளம்பர விழாவிற்குக்கூட என்னால் போக முடியவில்லை,” எனக் கூறி மிகவும் வருந்தினார் அமலா பால்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்