தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனக்கு காதல் கதைதான் மிகவும் பிடிக்கும்: கிரித்தி சனோன்

1 mins read
d56860ab-cc6e-422a-b0ed-27a41c287954
கிரித்தி சனோன். - படம்: ஊடகம்

காதல் கதையுடன் உருவாகும் படங்களில் நடிப்பதுதான் தமக்கு மிகவும் பிடித்தமானது என நடிகை கிரித்தி சனோன் கூறியுள்ளார்.

மேலும், தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதமான அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ திரைப்படங்களை அடுத்து, இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் ‘தேரே இஷ்க் மேன்’. இதில் தனுஷுடன் நடிகை கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இது ஓர் அழகான திரைப்படம் என்றார்.

“இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கு காதல் கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

“இந்தப் படமும் காதல் கதையுடன்தான் உருவாகிறது. கதையை வித்தியாசமாகத் தயார் செய்திருக்கிறார் இயக்குநர். தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறேன்.

“இப்படக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி,” என்றார் கிரித்தி சனோன்.

குறிப்புச் சொற்கள்