தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன்: ஸ்ரீலீலா

1 mins read
1358d5ce-3d43-423c-96bb-05e4030c57ef
ஸ்ரீலீலா, கார்த்திக் ஆர்யன். - படம்: ஊடகம்

இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனைத் தாம் காதலிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என நடிகை ஸ்ரீலீலா கூறியுள்ளார்.

இருவரும் தற்போது ‘ஆஷிகி-3’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். வரும் அக்டோர் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், தாம் சினிமாவை மட்டுமே காதலிப்பதாக விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீலீலா.

“நான் படப்பிடிப்புக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் என் தாயாரையும் அழைத்துச் செல்வேன். அவர் என்னுடன் இருக்கும்போது எப்படிக் காதலிக்கத் தோன்றும்?

“அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். எனவே, தவறான தகவல்களைப் பரப்பி என் நற்பெயரைச் சிதைத்துவிடாதீர்கள்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஸ்ரீலீலா.

தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர், தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்