இந்தித் திரையுலகை விட்டு விலக நினைத்ததில்லை: பிரியங்கா சோப்ரா

இந்தித் திரையுலகை விட்டு விலக நினைத்ததில்லை: பிரியங்கா சோப்ரா

1 mins read
ece408fc-88b5-483c-b58c-ba463e93f479
பிரியங்கா சோப்ரா. - படம்: மைண்ட்வேலி பிளாக்

இந்தித் திரையுலகைவிட்டு வெளியேற வேண்டும் எனத் தாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

எனினும், பாலிவுட்டில் பணியாற்றியபோது பல காரணங்களுக்காகத் தாம் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்ததால் எல்லையை விரிவுபடுத்த விரும்பியதாகவும் அவர் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் நடிப்பால் முத்திரை பதித்த பிரியங்கா, தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

“நடிகை​யாக உற்​சாக​ம் தரும் வாய்ப்​பு​களைத் தேடும் ஆசை வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்​கத் தொடங்​கினேன்​.

“ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தெரிவுசெய்து நடிப்பதற்கான உந்துதலை எனக்குள் காண்கிறேன். எனக்கு இந்தியப் படங்கள் மிகவும் பிடிக்கும்,” என்று கூறியுள்ளார் பிரியங்கா.

‘வாரணாசி’ படம் மூலம் மீண்டும் இந்தியத் திரையுலகுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட அவர், ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை என்றார். இரண்டு உலகங்களைக் கடந்து செல்வதுபோல உணர்வதாகவும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்