தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ எனப் பயந்தேன்: மீனாட்சி சௌத்ரி

1 mins read
13ce1956-03a2-47e8-9c9a-35368070ace3
மீனாட்சி சௌத்ரி. - படம்: ஊடகம்

மீனாட்சி சௌத்ரி நடிப்பில் அண்மையில் வெளியான ‘சங்கராந்திகி வஸ்துனம்’ தெலுங்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் வசூல் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார் மீனாட்சி.

அப்போது, 2024ஆம் ஆண்டு தமது வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆண்டாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“நடிக்க வந்த தொடக்கத்தில், வித்தியாசமான வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

“குறிப்பாக, ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் ஒரு தாயாக நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. மக்கள் என்னை ஒரு அம்மாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்து, கவலைப்பட்டேன்.

“சுமதி என்ற பெயரில் அமைந்த அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். ஆனால், மக்கள் என்னை சுமதியாகவே ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் மீனாட்சி சௌத்ரி.

அந்த வேடத்தில் நடிக்க தாம் தகுதியான நடிகை என்பதை இப்போது ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட இவர், ஒரு நடிகையாக, தமக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்காக சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

குறுகிய காலத்தில், மகேஷ் பாபு, விஜய், துல்கர் சல்மான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்து வருகிறார் மீனாட்சி சௌத்ரி.

‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ என இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்