என் வாழ்க்கை முழுவதும் கொண்டாடுவேன்: பிரதீப் ரங்கநாதன்

1 mins read
a8d11b2e-8d63-4587-8093-748136307428
அமீர் கானுடன் பிரதீப் ரங்கநாதன். - படம்: ஊடகம்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இந்தி நடிகர் அமீர் கானை மும்பையில் நேரில் சந்தித்துப் பேசி உள்ளார் அவர்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

“பலரும் சொல்வதைப்போல வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களின் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி அமீர் கான் சார். இதை என் வாழ்க்கையில் என்றும் கொண்டாடுவேன்,” எனப் பதிவிட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்நிலையில், பிரதீப்பின் புதுப் படத்தில் அமீர் கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்