பாலிவுட்டில் இருந்து தமிழ்த் திரையுலகுக்கு வரும் நடிகைகளின் பட்டியலில் அடுத்து இடம்பெற இருப்பவர் பூமி பட்னேகர்.
இந்தியில் ‘தும் லகா கே ஹைஷா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இதையடுத்து சிம்புவுக்கு ஜோடியாக இவரை ஒப்பந்தம் செய்ய முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசியுள்ளார் பூமி பட்னேகர். இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“நடிகைகள் அவ்வளவு எளிதில் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள். அவ்வாறு செய்தால் அந்த நடிகைகளைக் கொண்டாடக் கூட வேண்டாம். குறைந்தபட்சம் விமர்சிக்காமல் இருக்கப் பாருங்கள்,” என்கிறார் பூமி பட்னேகர்.
நடிகை என்றால் கவர்சியாக நடித்துதான் ஆக வேண்டும் என்று சிலர் பேசுவது வேதனை அளிக்கிறது என்றும் கவர்ச்சி காட்டும் பெண்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அப்போதுதான் நடிகைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ள இ்வருக்கு மற்ற இளம் நடிகைகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

