தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்: சசிகுமார் குறித்து திரிஷா

1 mins read
1b5ea84a-23d1-472f-b2bd-e15097f15505
திரிஷா - படம்: ஊடகம்

உணர்ச்சிகரமான கதைக்களம் மூலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் படக்குழுவினரைச் சந்தித்து தங்களது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை திரிஷா தற்போது அப்படம் குறித்து தமது கருத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

“தாமதமாகப் பார்த்தேன். இருப்பினும் அப்படத்தில் நடித்தவர்களின் நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்பதற்கு சசிகுமார் ஓர் உதாரணம்,” என அவர் பதிவிட்டிருந்தார்.

திரையிலும் வெளியுலகத்திலும் மற்றவர்களுக்கு நன்மை நினைக்கும் சசிகுமாருக்கு அப்படம் வெற்றிப் படமாக அமைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக திரிஷா கூறியுள்ளார். அத்துடன், அப்படத்தில் நடித்த நடிகை சிம்ரன், எம். எஸ். பாஸ்கர், இயக்குநர் அபிஷன் ஆகியோரையும் தமது பதிவில் அவர் பாராட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்