இளையராஜாவின் வாழ்க்கைப் படம் கைவிடப்படவில்லை: படக்குழு தகவல்

இளையராஜாவின் வாழ்க்கைப் படம் கைவிடப்படவில்லை: படக்குழு தகவல்

1 mins read
8a651b43-3c30-429f-98e5-76ffea30e009
‘இளையராஜா’ படத்தின் சுவரொட்டி. - படம்: சினிகிராஃப்ட்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் கைவிடப்படவில்லை எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் அறிமுக விழாவில் இளையராஜா, கமல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் மாறிவிட்டதாகவும் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாயின.

அருண் மாதேஷ்வரன் தற்போது லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் ‘டிசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதேபோல் தனுஷும் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். எனவே, இளையராஜா படம் கைவிடப்பட்டதாகவே கருதப்பட்டது.

இந்நிலையில், இப்படம் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் படம் முடிந்த கையோடு, இளையராஜா பட வேலைகளை அருண் மாதேஷ்வரன் தொடங்குவார் என்றும் மற்ற முக்கியமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்