தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா

1 mins read
219d17c3-184d-4fed-9675-279c5bb782ac
இளையராஜா. - படம்: ஊடகம்

தமிழக அரசு சார்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடைபெற இருந்த பாராட்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘சிம்பொனி’ இசையமைத்துச் சாதித்த அவருக்கு, ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக திரையுலகம் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதில்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திரையுலக நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வருகிறார்.

இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில், சினிமா பிரபலங்கள் அனைவருமே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாக அமையும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது உறுதி எனக் கூறப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு ஜூன் 3ஆம் தேதி பிறந்தநாளாகும். அன்றைய தினம் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக ஜூன் 2ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் இளையராஜா.

அதனால்தான் அந்தத் தேதியிலேயே அவருக்குப் பாராட்டு விழா நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

என்ன காரணத்தினால் இந்த விழா தள்ளிவைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

எனினும், அன்றைய தினம் இளையராஜா தம் ரசிகர்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்