ரஜினியின் 75வது பிறந்தநாளையொட்டி, அண்மையில் ‘படையப்பா’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.
படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தபிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா.
அப்போது, “25 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை எழுதிய கதை, இப்போதும் புதிய படத்தைக் காணும் அனுபவத்தைத் தருவது பெரிய விஷயம்.
“டிசம்பர் 12ஆம் தேதியே படத்தைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், அன்று அப்பாவுடன் திருப்பதி சென்றுவிட்டதால் பார்க்க முடியவில்லை.
“பொதுவாக ஒரு படத்தின் பாடலை மீண்டும் மீண்டும் திரையிடுமாறு ரசிகர்கள் திரையரங்குகளில் கோரிக்கை விடுப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், ‘படையப்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள, ஊஞ்சல் மீது அப்பா ஏறி அமரும் காட்சிகளைக்கூட மீண்டும் திரையிடுமாறு ரசிகர்கள் கேட்டது எனக்குப் புது அனுபவமாக இருந்தது,” என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

