தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உருவாகிறது ‘திருக்குறள்’ திரைப்படம்

1 mins read
43eedbb9-09f8-47e3-b1e9-7be24fd648c4
‘திருக்குறள்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் ‘திருக்குறள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே ‘காமராஜ்’ என்ற தலைப்பில் காலஞ்சென்ற தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கியவர்.

‘திருக்குறள்’ என்ற படத்தில் வள்ளுவராக கலைச்சோழனும் வாசுகியாக தனலட்சுமியும் நடிக்கின்றனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைப்பதுடன் பாடல்களையும் எழுதி உள்ளார்.

பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்