காவிரிப் போராட்டத்தின் எதிரொலியால் பெங்களூரு, சாம்ராஜ்நகர் உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் படத்தின் விளம்பர விளம்பரச் சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டள்ளன.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிரச்சினையில் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.
விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ படம் திரையிடப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்டுப் பலர் போராட்டம் நடத்தினர். மேலும் பதாகைகளைக் கிழித்து எறிந்தனர். இதையடுத்து அந்தத் திரையரங்கில் ‘ஜனநாயகன்’ திரையீடு `நிறுத்தப்பட்டது.
அதுபோல் சாம்ராஜ்நகர் நகரில் பசவரேஸ்வரா திரையரங்கிலும் ‘ஜனநாயகன்’ திரையிடப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலை அந்தத் திரையரங்கை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிலும் ‘ஜனநாயகன்’ படம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே காவிரி நீர்ப் போராட்டம் தீவிரமடைந்துவருவதால் பெங்களூரில் ஊர்வசி, பூர்ணிமா, அஞ்சன் உள்ளிட்ட பல திரையரங்குகளிலும் ‘ஜனநாயகன்’ வெள்ளிக்கிழமை முதல் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. அத்துடன் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டுவருகின்றன. ராமநகர், மைசூரு, சிவமொக்கா உட்பட பல நகரங்களிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளதாக;f கூறப்படுகிறது.
அத்திரைப்படம் 55 மல்டிபிளக்ஸ் எனப்படும் பலதிரை அரங்குகள், 100 திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. தற்போது காவிரி நீர்ப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பல திரையரங்குகளில் அந்தப் படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டுவருகிறது.
அரசியலில் முழுமையாகக் களமிறங்குவதற்கு முன்பு விஜய் நடித்த கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. ஆல், தணிக்கை தொடர்பான சர்ச்சைகளால் அப்படம் தமிழகத் தேர்தலில் விஜய் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்ற பிறகு வெளியானது.
அதனைத் தொடர்ந்து கர்நாடகத்தில் இந்தப் பிரச்சினை வெடித்திருக்கிறது.

