கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சங்கர் தயாரிப்பில் உருவான ‘ஈரம்’ திரைப்படம் இந்தியில் மறுபதிப்பு ஆகிறது. தமிழில் அறிவழகன் இயக்கி இருந்தார்.
நடிகர்கள் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்ய உள்ளனர்.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்குகிறார்.
இந்தி ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்ய இயலுமா என ஜான்வி தரப்பு கேட்க, அதற்கு ஒப்புக்கொண்டு இயக்குநரின் குழு களமிறங்கி இருப்பதாகத் தகவல்.

