சூரி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கோடையில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், கடலில் படகின் மீது உடற்பயிற்சி செய்யும் காணொளியை வெளியிட்டுள்ள சூரி, ரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்புடன் எழுதப்படும் ஒரு பயணம் என்று ‘மண்டாடி’ படத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

