தளராத அர்ப்​பணிபுடன் எழுதப்படும் பயணம் ‘மண்டாடி’: சூரி

தளராத அர்ப்​பணிபுடன் எழுதப்படும் பயணம் ‘மண்டாடி’: சூரி

1 mins read
b9449397-f9da-4638-a1d3-9c3b7e122c24
கடலில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யும் சூரி. - படம்: தின மலர்

சூரி ஹீரோ​வாக நடிக்​கும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இந்​தப் படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது.

இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் ஆகியோர் முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

தமிழ், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் கோடை​யில் இப்​படம் வெளி​யாக இருக்கிறது.

இந்​நிலை​யில், கடலில் படகின் மீது உடற்​ப​யிற்சி செய்​யும் காணொளியை வெளி​யிட்​டுள்ள சூரி, ரத்​தம், வியர்​வை, தளராத அர்ப்​பணிப்​புடன் எழுதப்​படும் ஒரு பயணம் என்று ‘மண்​டாடி’ படத்​தை குறிப்​பிட்​டுள்ளார்.

அந்தக் காணொளி இணை​யத்​தில் பரவலாக பகிரப்பட்டு வரு​கிறது.

குறிப்புச் சொற்கள்