திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு தனது இரண்டாம் கட்டத் திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் காஜல் அகர்வால்.
அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’, ‘தி இந்தியா ஸ்டோரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் வணிக ரீதியாகப் பெரும் தோல்வியை அடைந்தன.
இந்நிலையில், தற்போது அவர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் அவருடன் இணைந்து நடித்த ‘பகவந்த் கேசரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
வணிக ரீதியான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படத்தில் அவருக்குக் கண்ணியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பாலகிருஷ்ணாவுக்குக் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பட வெளியீடு 2027ஆம் ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் காஜல்.
இது தவிர, பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் இரண்டு பாகங்களிலும் மண்டோதரி கதாபாத்திரத்தில் காஜல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


