தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஆன்மீக, வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய படமாக உருவாகிறது ‘கண்ணப்பா’. ‘மகாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் குமார் இயக்கும் படம் இது.
தீவிர சிவ பக்தரான கண்ணப்பர் வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். சரத்குமார், மோகன்பாபு, அக்ஷய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகை காஜல் அகர்வால் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதையடுத்து அவரது கதாபாத்திரம் குறித்த அறிமுகச் சுவரொட்டியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ள நிலையில், தென்னிந்திய மொழிகளில் தமக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் காஜல் அகர்வால்.