தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காம்தார் நகர் வீதிக்குப் பாடகர் எஸ்பிபியின் பெயர்

1 mins read
e97a527e-ab42-4956-ab71-0eda73b36319
எஸ்.பி.பாலசுப்ரமணியம். - படம்: ஊடகம்

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்தார். அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் பாடல்களுக்கு ரசிகர்களின் மனதில் இன்றும் இடம் இருக்கிறது. அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்.பி.பியின் மகன் சரண். இந்தக் கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்