‘காஞ்சனா’ மறுவெளியீடு: முதல் நாள் வசூல் சாதனை

‘காஞ்சனா’ மறுவெளியீடு: முதல் நாள் வசூல் சாதனை

படம்: தினமலர்

14 Mar 2026 - 6:38 pm

1 mins read

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘காஞ்சனா’ படம், கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 13) மறுவெளியீடு செய்தனர்.

எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல் வெளியிடப்பட்ட நிலையில், முதல் நாளன்று தெலுங்குப் பதிப்பில் மட்டுமே மூன்று கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாகத் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான சில புதுப் படங்களைவிட ‘காஞ்சனா’வின் வசூல் அதிகமாக இருந்ததாம். இதையடுத்து, லாரன்ஸ் நடித்த மற்ற வெற்றிப் படங்களையும் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்தெலுங்குதிரைப்படம்வெளியீடு