நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு பகுதிதான் சொந்த ஊர்.
கன்னட சினிமாவில் அறிமுகமான இவர், பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவாகி இந்தியிலும் வெற்றிநடை போட்டு வருகிறார்.
எனினும், எங்கு சென்றாலும் தனது பூர்வீகம் ஹைதராபாத் என்று கூறுவதுதான் ராஷ்மிகாவின் வழக்கமாக உள்ளது. இதில் உண்மை உள்ளதா, இல்லையா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இதனால் கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மீது கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான ‘சாவா’ இந்திப் படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசும்போது தாம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவள் என்று மீண்டும் குறிப்பிட்டார் ராஷ்மிகா.
இதையடுத்து, சொந்த ஊரை மறக்கக் கூடாது என்று அவருக்கு கன்னட ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பாக காரசாரமான பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.

