தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நதியா, ரேவதி போல் நடிக்க விரும்பும் கன்னட நாயகி

1 mins read
564adb42-c8ed-40bb-893b-5c9d46e32f92
மேகா ஷெட்டி. - படம்: ஊடகம்

கன்னட நடிகை மேகா ஷெட்டி ‘காளையன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

கன்னடத்தில் ‘கைவா’, ‘தில்பசந்த்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு, தமிழில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாம்.

“நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க விரும்புகிறேன். சினேகா, ரேவதி, நதியா போன்று நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர வேண்டும் என்பதே எனது ஆசை.

“எனவே, சவாலான கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன்,” என்கிறார் மேகா ஷெட்டி.

‘காளையன்’ படத்தில் இவருக்கும் சில உணர்வுபூர்வமான காட்சிகள் உள்ளனவாம். அவற்றின் மூலம் தமிழ் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறாராம் மேகா.

குறிப்புச் சொற்கள்