‘கர்ணா’ படம் கைவிடப்படவில்லை: இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்

‘கர்ணா’ படம் கைவிடப்படவில்லை: இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்

1 mins read
4acb2dd0-450e-4659-a03f-62787238da59
சூர்யா, இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ். - படம்: கனெக்ட் மை இந்தியா
multi-img1 of 2

சூர்யா நடிப்பதாக இருந்த ‘கர்ணா’ படம் கைவிடப்படவில்லை என அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு இந்தி இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில், சூர்யா நாயகனாக நடிக்கும் ‘கர்ணா’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இது மகாபாரதத்தைத் தழுவி உருவாகும் படம் என்றும் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. பின்னர் இப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் ‘கர்ணா’ படம் கைவிடப்படவில்லை என்றும் இப்படத்துக்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என்றும் திரைக்கதை எழுதும் பணி நிறைவடைந்துவிட்டது என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பைத் தொடங்க இருந்தபோது சில காரணங்களால் படத்தைத் தள்ளிவைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்றும் இப்படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் ஏற்கெனவே ஆறு பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார் என்றும் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்