கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள்

கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள்

2 mins read
68f91648-0b17-453e-8d87-8cf6e070c65d
கார்த்தி. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள இரண்டு படங்கள் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

‘சர்தார்-2’, ‘மார்ஷல்’ ஆகிய இரு படங்களுமே சிக்கலின்றி உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

கார்த்தியின் 28வது படமான ‘சர்தார்-2’, திரைக்கதையை இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்ட மூன்று பேர் எழுதியுள்ளனர். இன்றைய மின்னலக்க உலகில் நடக்கும் உளவுக்கதையாம் இது.

கார்த்தியுடன் எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திலும் ‘சர்தார்’ முதல் பாகத்தைப் போலவே இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் கார்த்தி.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம், எதிர்வரும் மே மாதம் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ‘டாணாகாரன்’ தமிழ் இயக்கமான ‘மார்ஷல்’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடி கல்யாணி பிரியதர்ஷன்.

மேலும் சத்யராஜ், சேத்தன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படம், கடந்த 1960களில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது.

ராமேசுவரம், காரைக்கால் கடல் பகுதிகளில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இலங்கைக் கடற்பகுதியில் நடந்த கடற்கொள்ளைகள் பற்றிய கதை இது என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ‘மார்ஷல்’ படத்தை அடுத்து, நேரடித் தெலுங்கு படம் ஒன்றில் கார்த்தி நடிப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை கார்த்தியின் சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் என்றும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அநேகமாக இந்த மூன்று படங்களும் வெளியான பின்னர் ‘கைதி-2’ படத்துக்கு கார்த்தி தயாராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்