விமர்சனங்களைச் சாதனைகளால் எதிர்கொண்ட கத்ரீனா கைஃப்

விமர்சனங்களைச் சாதனைகளால் எதிர்கொண்ட கத்ரீனா கைஃப்

படம்: என்டிடிவி

18 Sep 2026 - 4:00 pm

1 mins read

இந்தித் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறந்த நடிகையாகவும் முன்னணித் தொழில்முனைவராகவும் கத்ரீனா கைஃப் திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கணவருடன் பங்கேற்ற இவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிப் பெரும் விவாதப் பொருளானது.

பிரசவத்திற்குப் பின்னர் உடல் மாற்றங்கள் இயற்கையானவை என்பதால், சில இணையவாசிகளின் உருவக் கேலி விமர்சனங்களுக்குச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

“தாய்மைக்குப் பிறகான உடல் மாற்றங்களை இயல்பாக ஏற்றுப் பொதுவெளியில் தோன்றும் கத்ரீனா பல கோடி பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார்,” என்றும் ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில், நிதி நாளிதழ்களும் வர்த்தக இதழ்களும் கத்ரீனாவின் தொழில்துறை வளர்ச்சியை வியந்து பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

இவரது ‘கே பியூட்டி’ (Kay Beauty) அழகு சாதன நிறுவனத்தின் வணிக வளர்ச்சி கடந்த 2025ல் ₹240 கோடியிலிருந்து 2026ஆம் ஆண்டில் ₹350 கோடியாக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து, மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் விரிவாக்கம் கண்டுள்ள இந்நிறுவனத் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் கத்ரீனா நேரடியாகப் பங்களித்து வருகிறார்.

₹220 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்து மதிப்பைக் கொண்டுள்ள இவர், இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நடிகைகளில் ஒருவராகவும் தொடர்கிறார்.

தேவையற்ற விமர்சனங்களைக் கடந்து, தனது தொழில்முறைச் சாதனைகள் மூலமாகவே உருவக் கேலிகளுக்குக் கத்ரீனா கைஃப் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்