நடிகை கயாது லோஹருக்கு காற்பந்து விளையாட்டில் அதீத ஈடுபாடு உண்டாம்.
பார்சிலோனாதான் அவருக்குப் பிடித்தமான அணி. அதேபோல் உலக அளவில் என்றால் அர்ஜென்டினா அணியின் தீவிர ஆதரவாளர்.
நள்ளிரவு, அதிகாலை எனக் காற்பந்து விளையாட்டுப் போட்டிகளைத் தொலைக்காட்சிகளில் எப்போது ஒளிபரப்பினாலும் தவறாமல் பார்த்துவிடுவாராம்.
அண்மையில் காற்பந்தாட்ட வீரர் மெர்சி இந்தியா வந்தபோது, அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் எனத் தீவிரமாக முயற்சி செய்தாராம் கயாது. அவரது இந்த ஆர்வம் குறித்து அறிந்த ஒரு முகவர், மெர்சியைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூற, கணிசமான தொகையை கொடுத்துள்ளார் கயாது.
இறுதியில், மெர்சி வந்தாரே தவிர, கயாதுவின் ஆசை மட்டும் நிறைவேறவில்லை. மெர்சிக்கு கொடுத்து வைக்கவில்லை என்று அந்த முகவர் சர்வசாதாரணமாக கைவிரித்துவிட்டதாகத் தகவல்.
ஆனால், நல்லவேளை கொடுத்த பணத்தைக் கறாராகக் கேட்டு, திருப்பி வாங்கிவிட்டாராம் கயாது.

