எக்காரணத்தைக் கொண்டும் தேவையற்ற கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க முடியாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார் ருக்மிணி வசந்த். இதன் காரணமாக, ஒரு பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது ரவி கிரண் கோலா இயக்கத்தில் ‘ரவுடி ஜனார்த்தன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ருக்மிணி வசந்தைத்தான் ஒப்பந்தம் செய்ய முடிவாகியிருந்ததாம். ஆனால், படத்தின் கதையை இயக்குநர் விவரித்த பிறகு, சில முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதை அறிந்ததும் உடனடியாகப் பின்வாங்கியுள்ளார் ருக்மிணி.
இதையடுத்து, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் கீர்த்தி, எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனே கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார்.