நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் இந்தியில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு ‘தெறி’ படத்தின் மறுபதிப்பில் நாயகியாக நடித்திருந்தார் கீர்த்தி. அந்தப் படம் வெற்றிபெறவில்லை.
பின்னர் திருமணமாகிவிட்டதால் பட வாய்ப்புகளை ஏற்காமல் இருந்த கீர்த்தி, தற்போது ‘அக்கா’ என்ற இணையத்தொடரில் நடித்து முடித்துள்ளார்.
இது மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மீண்டும் இந்தியில் ஒரு காதல் கதையில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.
கதை பிடித்துப்போன நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஊதியம் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது கீர்த்தியின் தரப்பு.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமாம்.