என் மகளின் வளர்ச்சி பெருமை அளிக்கிறது: ஏ.எல்.விஜய்

என் மகளின் வளர்ச்சி பெருமை அளிக்கிறது: ஏ.எல்.விஜய்

1 mins read
0b145dbd-f092-4653-8064-7c09e1027197
சாராவுடன் ஏ.எல்.விஜய். - படம்: தினமணி

ரூ.1,300 கோடி வசூல்கண்டு சாதனை படைத்துள்ளது ‘துரந்தர்’ இந்திப் படம்.

இதில் நாயகன் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் சாரா அர்ஜுன்.

இவர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது சாராவுக்கு 20 வயதாகிறது. இந்நிலையில் இந்தித் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, சாதித்துள்ள சாராவை நினைத்துத் தாம் பெருமைப்படுவதாக ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.

“ஒவ்வொரு முறை பள்ளித்தேர்வு முடிந்ததும் விடுமுறைக்குச் சென்னை வருவார் சாரா. அப்போது மறக்காமல் எங்கள் வீட்டுக்கும் வந்துசெல்வார்.

“என்னை ‘அங்கிள்’ என்று அழைத்தாலும், சாரா என்னைப் பொறுத்தவரை என் மகளைப் போன்றவர்.

“அவருக்குள்ள திறமைக்கு மேலும் பல உயரங்களை நிச்சயமாக எட்டிப்பிடிக்க முடியும்,” என்று அண்மைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஏ.எல்.விஜய்.

குறிப்புச் சொற்கள்