மீண்​டும் தள்​ளிப் போகிறது ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’

மீண்​டும் தள்​ளிப் போகிறது ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’

1 mins read
cfe55c17-94d3-4296-a522-6091ed80e173
லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ (எல்​ஐகே) படத்தில் பிரதீப் ரங்​க​நாதன், எஸ்​.ஜே.சூர்​யா, சீமான் நடித்துள்ளனர். - படம்: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ

இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்​க​நாதன் நடித்​துள்ள ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ (எல்​ஐகே) படத்தை விக்​னேஷ் சிவன் இயக்​கி​யுள்​ளார்.

இதில் கிருத்தி ஷெட்​டி, எஸ்​.ஜே.சூர்​யா, சீமான், யோகி பாபு, கெளரி கிஷண் உள்​ளிட்ட பலரும் நடித்​துள்​ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இப்​படத்தை ‘ரவுடி பிக்​சர்ஸ்’ சார்​பில் நயன்​தா​ரா, ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்​பில் எஸ்​.எஸ்​.லலித்​ கு​மார் ஆகியோர் தயாரித்​துள்​ளனர்.

இப்​படம் கடந்த ஆண்டு தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாக இருந்​தது. பின்​னர் அது டிசம்​பர் மாதத்​துக்குத் தள்ளி வைக்​கப்​பட்​டது. அடுத்து காதலர் தினத்தை முன்​னிட்டு பிப்ரவரியில் வெளியாக இருப்பதாகக் கூறப்​பட்​டது. அதன்பின் ஏப்ரல் 3ஆம் தேதி வெளி​யாக இருப்பதாக அறிவித்​தனர்.

ஆனால், இதுவரை படத்​துக்​கான விளம்பரப் பணிகள் எது​வும் தொடங்​கப்​பட​வில்​லை. இதனால் இப்​படம் மீண்டும் தள்​ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்