‘வெக்கை’ படத்தில் வாழ்க்கையை புரட்டிப்போடும் தெருச் சண்டை

‘வெக்கை’ படத்தில் வாழ்க்கையை புரட்டிப்போடும் தெருச் சண்டை

1 mins read
b90b9d3b-f973-4073-becc-fa7d403d77f3
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘வெக்கை’ படத்தின் சுவரொட்டி. - படம்: டிடிநெக்ஸ்ட்.இன்

அகிரன் மோசஸ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் துடிப்பான இளையராக நடிக்கும் புதிய திரைப்படம் ‘வெக்கை’.

இப்படத்தில் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிக்க, மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சுனில், மைம் கோபி, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராற்றை மையமாக வைத்து, அதிரடிச் சண்டைக் காட்சிகள் கொண்ட திகிலூட்டும் கதைக்கருவுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நொடிப் பொழுதில் வரும் கோபமும் மனிதர்களின் அகங்காரமும் எப்படி அடுத்தடுத்த நிமிடங்களில் பலரது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது என்பதைப் படம் விவரிக்கிறது.

பரபரப்பான தெருச் சண்டையின் பின்னணியில் மனிதர்களின் உணர்வுகள், காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகளைக் கலந்து, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாக இயக்குநர் அகிரன் மோசஸ் செதுக்கியுள்ளார்.

சாலையில் நடக்கும் எதார்த்தமான சண்டையை மையமாகக் கொண்டுள்ளதால் ‘வெக்கை’ படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்