‘கூலி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் பணியை சில காலம் ஒத்திவைத்துவிட்டு நடிக்கச் சென்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ். அவர் நாயகனாக நடிக்கும் ‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் அடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ் முன்பணம் வாங்கியுள்ளாராம்.
படப்பிடிப்பை விரைவில் தொடங்குமாறு அல்லு அர்ஜுன் கூறியதையடுத்து, ‘டிசி’ படப்பிடிப்பை வேகப்படுத்தியுள்ளார் லோகேஷ்.
அல்லு அர்ஜுன் படத்துக்காக லோகேஷ் உருவாக்கியுள்ள கதை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், மொத்த இந்திய ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.
அதனால்தான் முழுக்கதையைக்கூட கேட்காமல் வெறும் கதைச்சுருக்கத்தை மட்டுமே கேட்டு நடிக்க சம்மதித்தாராம் அல்லு அர்ஜுன்.

