தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜி.டி.நாயுடுவாக மாதவன்; படச் சுவரொட்டி, அறிமுக விளம்பரக் காட்சி வெளியீடு

1 mins read
dfdb56d0-6f16-47c6-a87e-80d913002ffc
ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவன். - படம்: இன்ஸ்டகிராம்/ஆர். மாதவன்

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்கிறார்.

இப்படத்தின் சுவரொட்டி, அறிமுக விளம்பரக் காட்சி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

கோபாலசுவாமி துரைசுவாமி நாயுடு மிகச் சிறந்த தொழில்நுட்ப மறுவடிவமைப்பாளர், தொழில்துறை முன்னோடி ஆவார்.

படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கியுள்ளது. படச் சுவரொட்டியிலும் அறிமுக விளம்பரக் காட்சியிலும் வித்தியாசமான தோற்றத்தில் மாதவன் இருப்பதால், இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

‘ஜி.டி.என்.’ என்று படத்துக்குப் பெயரிபட்டுள்ளது.

படத்தினை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி, இயக்கி வருகிறார். ‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணிபுரிந்து வருகிறார்.

இந்தியா மட்டுமன்றி ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காகப் பல ஆண்டுகளாகத் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது படக்குழு. மேலும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்