மற்றொரு தேசிய விருதை நோக்கி மாதவன் நடிக்கும் ‘ஜிடிஎன்’

மற்றொரு தேசிய விருதை நோக்கி மாதவன் நடிக்கும் ‘ஜிடிஎன்’

1 mins read
779e0a15-09c1-47fe-9aeb-705caa591d26
மாதவன். - படம்: இந்தியா டுடே
multi-img1 of 2
Google News Preferred Icon

‘இந்தியாவின் எடிசன்’ எனப் போற்றப்படுபவர் மறைந்த பெரும் கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடு.

அவரது வாழ்க்கை வரலாறு ‘ஜிடிஎன்’ (GDN) என்ற தலைப்பில் தமிழில் உருவாகிறது.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாதவன்.

கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஜி.டி. நாயுடுவின் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்துறை சாதனைகள், சமூக நலனில் அவர் காட்டிய அக்கறை, அப்போதைய நிர்வாகங்களுக்கு எதிராக அவர் நடத்தியப் போராட்டங்கள் ஆகியவற்றைத் திரையில் கொண்டு வருகிறது.

அக்கதாபாத்திரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாக இயக்குநர் பாராட்டுகிறார்.

“கதாபாத்திரத்தின் உடல் மொழியையும் தோற்றத்தையும் அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக மாதவனின் கடுமையான உழைப்பு, ஒப்பனை மாற்றங்கள் ஆகியவை ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெறும்.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் திரையிடலில் படம் திரையிடப்பட்டு, விமர்சகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவாகியுள்ள இப்படம், மாதவனின் முந்தைய ‘பயோபிக்’ படமான ‘ராக்கெட்ரி’ போல தேசிய விருதைப் பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்