நாயகனையும் இயக்குநரையும் பாராட்டிப் பதிவிட்ட மாளவிகா

நாயகனையும் இயக்குநரையும் பாராட்டிப் பதிவிட்ட மாளவிகா

படம்: விகடன்

03 Oct 2026 - 4:32 pm

1 mins read

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா குறித்தும் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில், “சில திரைப்படங்கள் உருவாகும்போது அவை தனக்கான ஒரு குட்டி உலகமாகவே மாறிவிடுகின்றன. மாதக்கணக்கில் ஒரு குழுவாக தினமும் பல மணிநேரங்களை இணைந்து கடக்கும்போது, அவர்கள் சொந்த வீட்டிற்கு அப்பால் மற்றொரு வீடாகவே மாறிவிடுகிறார்கள். விஜய் சேதுபதி மிகவும் அக்கறையுள்ள, விட்டுக்கொடுக்கும் பண்புள்ள ஒரு சக நடிகர்.

“முன்பு வெளியான ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களுக்குப் பிறகு அவருடன் ஒரே திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவைப் பற்றி குறிப்பிடுகையில், “அவர் பதற்றமில்லாத, நிதானமான மனிதர். மனிதர்களையும் உலகத்தையும் அவர் பார்க்கும் விதம் மிகவும் தனித்துவமானது. அவருடன் பணியாற்றியது என் வாழ்நாளின் சிறந்த அனுபவம்,” என்று தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்.

குறிப்புச் சொற்கள்
நடிகைவிஜய் சேதுபதிதிரைப்படம்இயக்குநர்பாராட்டு